ஆதிபுருஷ் படத்திற்கு தடை.? அவசர வழக்காக விசாரிக்க மறுத்த டெல்லி நீதிமன்றம்.!
ஆதிபுருஷ் படத்திற்கு தடை கேட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
பாலிவுட் இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பெரிய பொருட்செலவில் உருவான திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. வெளியான நாள் முதல் பல்வேறு சர்ச்சைகளை இப்படம் எதிர்கொண்டு வருகிறது.
ராமாயணத்தை தவறாக சித்தரித்து விட்டனர். படத்தில் வசனங்கள் தவறாக இருக்கிறது என கூறி இப்படத்திற்கு தடை கேட்டு ஹிந்து சேனா தலைவர் விஷ்ணு குப்தா டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். மேலும் இந்த வழக்கை அவசரவழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது . ஆதலால் வழக்கமான முறையிலான விசாரணையின் போது மட்டுமே இந்த வழக்கு விசாரணை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.