மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் வெளியீடு!

சென்னை மண்டலத்தில் நாளை முதல் 138 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் 500 மதுபான சில்லறை கடைகள் மூடப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி 500 மதுக்கடைகளை மூட அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டபடி 500 மதுக்கடைகள் உடனே மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அந்தவகையில், தமிழகத்தில் 500 மதுபான சில்லறை கடைகள் நாளை முதல் மூடப்படுகிறது என்று தமிழக அரசு இன்று அறிவித்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மண்டல வாரியாக மூடப்படும் 500 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில், சென்னை மண்டலத்தில் 138 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளன.
இதுபோன்று, மதுரை மண்டலத்தில் – 125, திருச்சி மண்டலத்தில் – 100 கோவை மண்டலத்தில் – 78, சேலம் மண்டலத்தில் – 59 என மொத்தம் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இதனடிப்படையில், இந்த 500 மதுக்கடைகள் நாளை முதல் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025