அமலாக்கத்துறைக்கு எந்தவித விதிமுறைகளும் கிடையாது.! காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் விமர்சனம்.!
அமலாக்கத்துறைக்கு என எந்தவித விதிமுறைகளும் கிடையாது அதனால் அதனை சிபிஐ உடன் இணைக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார்.
இன்று புதுக்கோட்டையிலி கட்சி நிகழ்வுகளில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமலாக்கத்துறையை சிபிஐ உடன் இணைத்து விட வேண்டும் என தெரிவித்தார் .
அதாவது, சிபிஐக்கு என்று ஒரு விதிமுறைகள் உண்டு. ஆனால், அமலாக்கத்துறைக்கு என்று எந்த விதிமுறைகளும் கிடையாது. ஆதலால், பாஜவுக்கு எதிராக செயல்படும் கட்சிகளை ஒடுக்கும் இயக்கமாகவே அமலாக்கத்துறை செயல்பட்டு வருகிறது என கார்த்திக் சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
அண்மையில் தான் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.