போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது – மின்வாரியம் எச்சரிக்கை

TNEB

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது என தமிழக அரசு எச்சரிக்கை.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போராட்டம் நடத்த மின்வாரிய ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். அதாவது, ஊதிய உயர்வு, கேங்மேன்கள் தேர்வு, போஸ்டிங், ஒப்பந்த தொழிலாளர்கள், பகுதி நேர பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மின்சார ஊழியர்கள் நீண்ட காலமாக வைத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை தமிழ்நாடு மின் வாரியம் இதுவரை நிறைவேற்றியது இல்லை என்றும் கூறி வருகின்றனர். இந்த சமயத்தில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அந்த நாளுக்கான ஊதியம் கிடைக்காது என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதாவது, தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள போராட்டத்தில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு சம்பளம் கிடைக்காது. போராட்டம் செய்யும் நாள் பணி விடுப்பு நாளாக கருத்தில் கொள்ளப்படும் என்றும் மாறாக லாஸ் ஆப் பே நாளாக கணக்கில் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை தலைமைக்கு அனுப்ப மண்டல பொறியாளர்களுக்கு மின்வாரியம் அணையிட்டுள்ளது. ஊழியர்கள் போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும், எந்த இடத்திலும் மின் தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தலும் வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்