ஒரு பாலின திருமண சட்டம்..எஸ்டோனியா நாட்டில் நிறைவேற்றம்..!

samesexmarriage

ஒரு பாலின திருமண சட்டத்திற்கு எஸ்தோனியா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரு பாலின திருமண சட்டத்திற்கு எஸ்தோனியா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது என்று பிரதமர் காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார். இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் முதல் மத்திய ஐரோப்பிய நாடாகவும், முதல் முன்னாள் சோவியத் நாடாகவும் எஸ்டோனியா மாறியுள்ளது.

இதுகுறித்து கல்லாஸ் பதிவிட்ட ட்வீட்டில், எஸ்டோனியா ஒரு பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இந்த வரலாற்று முடிவுடன் நாங்கள் மற்ற நோர்டிக் நாடுகளுடன் இணைகிறோம். அனைவரின் உரிமைகளும் மதிக்கப்படும் மற்றும் மக்கள் சுதந்திரமாக நேசிக்கக்கூடிய ஒரு சமூகத்தை நாங்கள் உருவாக்குகிறோம். என்று கூறியுள்ளார்.

ஒரு பாலின திருமண சட்டம் தொடர்பாக 101 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில், இந்த மசோதா 55 வாக்குகளைப் பெற்றது. இச்சட்டம் 2024ம் ஆண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு 1.3 மில்லியன் மக்கள் வாழும் பால்டிக் நாட்டில், மனித உரிமைகளுக்கான மையம் நடத்திய வாக்கெடுப்பில், 53% மக்கள் ஒரே பாலின திருமணத்தை ஆதரித்தனர். 10 வருடங்களுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 34% ஆக இருந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்