நாளைய தமிழகத்தின் முதல்வா…போஸ்டர் ஒட்டி பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்.!!
நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என அவருடைய ரசிகர்கள் பலருக்கும் கூறி வருகிறார்கள். இந்நிலையில், அதனை கருத்தில் கொண்டு சில ரசிகர்கள் நாளைய தமிழகத்தின் முதல்வா என்ற பெயர் பலகையுடன் போஸ்டர்களை ஒட்டி அடிக்கடி பரபரப்பை கிளப்பி வருகிறார்கள்.
அந்த வகையில், நாளை விஜய் தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடவுள்ள நிலையில், உசிலம்பட்டியில் உள்ள விஜய் ரசிகர்கள் ஜூன் 22-ல் பிறந்த நாள் காணும் நாங்கள் வணங்கும் தலைவா…நாளைய தமிழகத்தின் முதல்வா என ரைமிங்கான வசனத்துடன் போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டர் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. இதைப்போலவே, மதுரையில் இருக்கும் விஜய் ரசிகர்கள் சிலருக்கும் கூட, நாளை விஜய் பிறந்த நாளை முன்னிட்டு பல பகுதியில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.