டிஜிபி நியமனத்தில் யுபிஎஸ்சி விதிகளை பின்பற்றமாட்டோம்.! பஞ்சாப் மாநில அரசு அதிரடி அறிவிப்பு.!
டிஜிபி நியமனத்தில் மாநில அரசின் விதிகள் மட்டுமே இனி பின்பற்றப்படும் என பஞ்சாப் மாநில அரசு மசோதா நிறைவேற்றியுள்ளது.
பஞ்சாப் மாநில அரசு பஞ்சாப் சட்டசபையில் ஓர் மசோதாவை நிறைவேற்றியது. மாநில டிஜிபி தேர்வானது , ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவால் மேற்கொள்ளப்படும் எனவும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் அதிகாரிகள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் டிஜிபியாக பணியாற்றுவார்கள் எனவும் அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின் மூலம் டிஜேபி நியமனத்தில் அரசியல் மற்றும் நிர்வாக தலையீடு இல்லாமல் இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது டிஜிபி நியமனத்தை யுபிஎஸ்சி தான் செயல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அரசு நிறைவேற்றி உள்ள இந்த சட்ட மசோதாவை ஏற்கனவே ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களும் நிறைவேற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.