இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழக காவல்துறை..!
இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக, பெண்கள் பாதுகாப்பு திட்டம் அறிமுகம்.
தமிழ்நாடு காவல்துறை இரவு நேரங்களில் தனியாக பயணிக்க அச்சப்படும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக, ‘பெண்கள் பாதுகாப்பு திட்டம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தனியாக பயணிக்க பாதுகாப்பு குறைவு என நினைக்கும் பெண்கள், 1091, 112 , 044-23452365, 044-28447701 ஆகிய உதவி எண்களுக்கு தொடர்பு கொண்டால், அவர்கள் இருக்கும் இடங்களுக்கே காவல்துறை ரோந்து வாகனங்கள் வந்து அழைத்துச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நாட்களிலும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சேவை இலவசமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்பு புதிய திட்டம் – தமிழ்நாடு காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.#WomensSafety #WomenHelplineNumber #PoliceDepartment #DGPSylendrababuIPS #TNpolice pic.twitter.com/aPru21pBlH
— Tamil Nadu Police (@tnpoliceoffl) June 20, 2023