ஆருத்ரா மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்…!
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முதற்கட்டமாக 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
தமிழகத்தில் தங்கத்தில் முதலீடு செய்வதாக கூறி சுமார் ஒரு லட்சம் பேருக்கு மேல் முதலீடுகளை பெற்று ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை அடிப்படையில் இதுவரை 61 இடங்களில் சோதனை செய்யப்பட்டதில் ரூ.6.35 கோடி பணம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை, தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில், ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் முதற்கட்டமாக 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். நாளை 3,000 பக்க கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.