TNPL 2023 Live: திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெறுகிற நிலையில், இன்று நடைபெறும் 10வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் திண்டுக்கலில் உள்ள என்பிஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.
இதில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நெல்லை அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 125 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய திருப்பூர் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டை இழந்து 128 ரன்கள் எடுத்தது.
இதனால், திருப்பூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை அணியை வென்று, தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது. இதில் அதிகபட்சமாக துஷார் ரஹேஜா 49 ரன்களும், ராதா கிருஷ்ணன் 34 ரன்களும், விவேக் 21 ரன்களும் குவித்துள்ளனர். நெல்லை அணியில் சோனு யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
நெல்லை ராயல் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):
ஸ்ரீ நெரஞ்சன், அருண் கார்த்திக்(C), அஜிதேஷ் குருசுவாமி, ரித்திக் ஈஸ்வரன்(W), சோனு யாதவ், எஸ்.ஜே.அருண்குமார், லக்ஷ்மேஷா சூர்யபிரகாஷ், எம்.பொய்யாமொழி, லட்சுமிநாராயணன் விக்னேஷ், லக்ஷய் ஜெயின் எஸ், சந்தீப் வாரியர்
ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் (பிளேயிங் லெவன்):
துஷார் ரஹேஜா(W), என்எஸ் சதுர்வேத்(C), எஸ் ராதாகிருஷ்ணன், விஜய் சங்கர், ராஜேந்திரன் விவேக், பால்சந்தர் அனிருத், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், எஸ் அஜித் ராம், அல்லிராஜ் கருப்புசாமி, பி புவனேஸ்வரன், ஜி பெரியசாமி