என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்பு கோட்டை – கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் முதல்வர் பேச்சு!

mk stalin

இன்னமும் கலைஞர் ஆள்கிறார் என்பதன் அடையாளமாக தான் கலைஞர் கோட்டம் அமைத்திருக்கிறது என்று திறப்பு விழாவில் முதலமைச்சர் உரை. 

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி பிறந்து வளர்ந்த ஊரான திருவாரூரில் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் காட்டூரில் கருணாநிதி நினைவாக ரூ.12 கோடியில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. 7,000 சதுர அடி பரப்பளவில் ரூ.12 கோடி செலவில் திருவாரூர் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்த பின் அவ்விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்பு கோட்டையாகவே நான் இதை பார்க்கிறேன். திருவாரூர் தேர் அழகு என்பார்கள், அந்த ஊரில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞரை நாடு போற்றும் தலைவராக உருவாக்கிய ஊர் திருவாரூர். தேர் மீண்டும் நிலைக்கு வந்து சேர்வது போல் திருவாரூரில் கலைஞருக்கு கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

நிறைவுற்ற வாழ்க்கைக்கு பிறகும் மருத்துவமனையாக, நூலகமாக, கோட்டமாக பயனளித்து கொண்டிருப்பவர் கலைஞர்.  இன்னமும் கலைஞர் ஆள்கிறார் என்பதன் அடையாளமாக தான் கலைஞர் கோட்டம் அமைத்திருக்கிறது. திராவிட ம்,மாடல் ஆட்சியரை கலைஞருக்கு காணிக்கையாக செலுத்தி கொண்டிருக்கிறேன். கலைஞர் என்ன  முடிவு எடுப்பார் என யோசித்து அதைப்போலவே செயல்படுகிறேன். இந்திய அரசியலில் மாபெரும் ஆளுமையாக இருந்தவர் கலைஞர்.

கலைஞரின் பன்முக பரிமாணங்களை சொல்லக்கூடிய கருவூலம் தான் கலைஞர் கோட்டம். சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து ஊர்களுக்கும் திட்டங்களை செயல்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என புகழாரம் சூட்டியுள்ளார். இதை தொடர்ந்து பேசிய முதல்வர், முதல் ஜனநாயக விளக்கை பாட்னாவில் ஏற்ற நிதிஷ் குமார் தயாராகி வருகிறார். சர்வாதிகாரத்தை காட்டுத்தீ என்று சொன்னவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. ஜனநாயக போர்க்களத்தில் தமிழ்நாட்டின் தளபதியாக பங்கேற்க உள்ளேன். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் தேசிய அளவிலும் ஒருங்கிணைய வேண்டும். பீகாரில் எதிர்க்கட்சிகள் சந்திப்பு நாடளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும்.

கடந்த 10 ஆண்டுகளாக பாஜக பரப்பிவரும் சர்வாதிகார காட்டுத்தீயை அணைக்கும் கடமை நமக்கு இருக்கிறது. இந்திய நாட்டின் ஜனநாயகத்தை காக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம். இதனை நம்மால் செய்ய முடியாவிட்டால், வேறு யாராலும் செய்ய முடியாது. மீண்டும் பாஜகவை ஆள அனுமதிப்பது தமிழ்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் கேடாக அமையும். இந்தியா முழுவதும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த தயாராவோம், நாற்பதும் நமதே, நாடும் நமதே என முதல்வர் உரையாற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்