கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Kalaignar kottam inaugurated

திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திருவாரூரில் ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் திறந்து வைப்பதாக இருந்தது, ஆனால், அவரது பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலைஞர் கோட்ட திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர். தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் காட்டூரில் கருணாநிதி நினைவாக ரூ.12 கோடியில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. 7,000 சதுர அடி பரப்பளவில் ரூ.12 கோடி செலவில் திருவாரூர் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

கோட்டத்தில் கருணாநிதி சிலை, முத்துவேலர் நூலகம், கருணாநிதியின் பழைய புகைப்படங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன. கலைஞர் கோட்டத்தில் முத்துவேலர் நூலகத்தை திறந்து வைத்தார் பீகார் முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். கருணாநிதி பிறந்து வளர்ந்த திருவாரூரில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்