+2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. IITயில் பல்வேறு வேலைவாய்ப்புகள்.!
+2, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு IIT கரக்பூரில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐஐடி கரக்பூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 12ஆம் வகுப்பு முதல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் வரையில் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது . மொத்தமுள்ள 153 இடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 5ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..
பணியின் விவரங்கள்:
- உதவி அலுவலர், உதவி கணக்காளர், உதவி பொறியாளர், செவிலியர், உடற்பயிற்சி அலுவலர் (டிகிரி அளவிலான பணியிடங்கள்).
- காவலாளி, ட்ரைவர் (டிப்ளமோ, 12ஆம் வகுப்பு, ITI படித்தவர்கள்)
காலியிடங்கள் :
- டிகிரி அளவிலான பணிகள் – 125
- டிப்ளமோ – 11 (பல்வேறு பிரிவுகளில்).
கல்வித்தகுதி :
- டிகிரி அளவிலான பணிகள் – தேவைப்படும் பிரிவுகளில் இளங்கலை பொறியியல், டிப்ளமோ , ஏதேனும் ஒரு டிகிரி முடித்து இருக்க வேண்டும்.
- டிப்ளமோ – 10, +2, டிப்ளமோ, ITI முடித்து இருக்க வேண்டும். (பணிக்கேற்ற கல்வித்தகுதி பெற்று இருக்க வேண்டும்)
சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்):
- ரூ.21,700/- முதல் 1,12,400 வரையில் (கல்வித்தகுதி மற்றும் அனுபவம் அடிப்படியில்)
வயது வரம்பு –
- டிகிரி அளவிலான பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது 30.
- டிப்ளமோ அளவுக்கான காலிப்பணியிடங்களுக்கு அதிகபட்ச வயது 25.
- அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
- எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணல் வாயிலாக பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 05 ஜூலை 2023.
விண்ணபக்கட்டணம் :
- பொதுப்பிரிவுக்கு ரூ.500/-
- SC/ST பிரிவினருக்கு – ரூ.250/-
விண்ணப்பிக்கும் முறை :
- IIT கரக்பூர் பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ தலமான erp.iitkgp.ac.in க்கு செல்ல வேண்டும்.
- அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் எந்தப்பணிக்கு விண்ணப்பிக்க உளீர்களோ அதற்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர், ஆவணங்களை அடிப்படையில் பெயர், முகவரி, கல்வித்தகுதி பதிவிட்டு , அதற்கான அவங்களை குறிப்பிட்ட அளவில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- வீண்ணப்பங்கள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அவர்கள் கொடுத்த தொலைபேசி, இணையதள முகவரி கொண்டு எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
- அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு பின்னர் பணியமர்த்தப்படுவர்.