முதல் முத்தம் இப்படிதான் நடந்தது…வெட்கத்தை விட்டு உண்மையை உளறிய கிஷோர் மனைவி.!!
பசங்க, கோலிசோடா ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமான நடிகர் கிஷோர் கடந்த மார்ச் மாதம் கடந்து நீண்ட நாள் காதலியான பிரீத்தி குமார் என்பவரை செய்து கொண்டார். ப்ரீத்தி குமார் பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், திருமணம் முடிந்ததை தொடர்ந்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பல கேள்விகளுக்கு கிஷோரும், அவருடைய மனைவி ப்ரீத்தி குமாரும் பதில் அளித்தனர். அந்த பேட்டியில், அவர்களிடம் உங்களுடைய முதல் முத்தம் எப்போது..? என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
அந்த கேள்விக்கு பதில் அளித்த ப்ரீத்தி குமார் ” எங்களுடைய முதல் முத்தம் காரில் தான். அண்ணா நாகர் ரோட்டில் தான் நடந்தது. அதை நாங்கள் இருவரும் எதிர்பார்க்கவே இல்லை. பொதுவாகவே இரண்டு பேருக்கும் ஆசையிருக்கும். ஆனால், அந்த ஆசையை யார் முதலில் சொல்வார்கள் என்ற ஒரு யோசனை இருவருக்குமே இருக்கும்.
அன்று ஒரு நாள் காரில் நாங்கள் இருவரும் இருந்தபோது காற்று வீசியது, மழையும் பெய்தது. அந்த நேரத்தில் தான் முதல் முத்தம் நடந்தது” என கூறியுள்ளார். இவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பிரைவசியாக வைத்து கொள்ளாமல் வெளிப்படையாக பேசுறீங்க எனவும், மேலும் சிலர் இது என்ன கேள்வி எனவும் கூறி வருகிறார்கள்.