தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால் இனி கவலை வேண்டாம்… வாட்ஸ்அப்பில் புதிய அம்சம் அறிமுகம்.!
இனி தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் தானாகவே சைலன்ஸ ஆகிவிடும் புதிய அம்சம் வாட்ஸ்அப்பில் அறிமுகம்.
உலகில் பல பில்லியன் மக்கள் பயன்படுத்தும் ஆப்ஸ் களில் ஒன்றான வாட்ஸ்அப், தனது பயனர்களுக்கு பாதுகாப்பு அம்சத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் அவ்வப்போது பல அப்டேட்களை வெளியிட்டு வருவது வழக்கம். அதேபோல் தற்போது மெட்டா நிறுவனம் தனது செயலியான வாட்ஸ்அப்பில் புதிய அம்சத்தை அறிமுகபடுத்தியுள்ளது.
இந்த அம்சத்தின் மூலம் இனி தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் கவலைப்படவேண்டாம். அந்த அழைப்பு தானாகவே அமைதியாகிவிடும். அதாவது நம் சேமித்து வைத்திருக்கும் தொடர்பு எண்கள் தவிர வேறு யாராவது வாட்ஸ்அப்பில் அழைத்தால் அது நமக்கு தொந்தரவை ஏற்படுத்தாதவாறு அதனை நாம் சைலன்ஸ் மோடில் வைத்துக்கொள்ளலாம்.
இந்தியாவில் பலர் தங்களது வாட்ஸ்அப் எண்ணுக்கு தெரியாத எண்ணிலிருந்து அழைப்பதாகவும், அது பெரும்பாலும் ஸ்பேம் அழைப்பாக இருப்பதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இதன்மூலம் நிறைய பயனர்கள் லட்சக்கணக்கில் தங்களது பணத்தை இழந்தததாகவும், சிலர் இழக்க நேரிட்டதாகவும் வாட்ஸ்அப்புக்கு புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து மெட்டா நிறுவனம் தற்போது இந்த அப்டேட்டை வெளியிட்டுள்ளது.
தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் தானாகவே அமைதிப்படுத்த, நமது வாட்ஸ்அப்பில் பிரைவசி அமைப்புகளில் உள்ள அழைப்புகளில் நாம் சைலன்ஸ் அன்நோன் நம்பர்ஸ் என்பதை தேர்வு செய்யவேண்டும். இதனை மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.