செந்தில் பாலாஜி மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியேட் மனு.! அமலாக்கத்துறை வழக்கில் புதிய திருப்பம்.!
அமலாக்கத்துறை வழக்கு குறித்து செந்தில் பாலாஜி மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியேட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அமலாகாதுறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது சென்னை காவேரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இவர் முதலில் நெஞ்சுவலி வலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரரர் அரசு மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அதன்பிறகு செந்தில்பாலாஜி தரப்பு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை மனு வைத்து, அவரை மேல் சிகிச்சைக்கு காவேரி மரறுத்துவமனைக்கு மாற்ற அனுமதி வாங்கினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் அமலாக்கத்துறையினர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர். இந்த மனுமீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில், செந்தில்பாலாஜி மனைவி, உச்சநீதிமன்றத்தில் கேவியேட் மனு தாக்கல் செய்துள்ளார். அதாவது, அமலாக்கத்துறையினர் வழக்கு விசாரணை நடைபெறும் போது தங்கள் தரப்பு வாதத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.