மழை பாதிப்பு – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.! தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை
மழை பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலகத்தில் தலைமை செயலர் இறையன்பு தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற உள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் நேற்று முன் தினம் முதல் பல்வேறு இடங்களில் மழைபெய்தது. ஜூன் மாத காலத்தில் பெய்த மிகப்பெரிய மலை அளவுகளில் ஒன்றாக நேற்று பெய்த மழையளவு பதிவாகி இருந்த்து.
இந்த மழை பாதிப்புகள் குறித்து நேரில் ஆய்வு செய்ய வலியுறுத்தி தமிழக முதல்வர் மூத்த அமைச்சர்களுக்கு உத்தரவிட்டு இருந்தார். அதன் பெயரில், தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், கே.கே.எஸ்எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று பிற்பகல் சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் உயர் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில், மழை குறித்த பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.