சென்னையில் ஜுன் மாதத்தில் இயல்பை விட 295% அதிக மழை… வானிலை மையம்.!
சென்னையில் ஜூன் மாதத்தில் பெய்த மழை இயல்பை விட 295% அதிகம் என வானிலை மையம் தகவல்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் சில பகுதிகளில் இன்னும் மழை தொடரும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 27 வருடத்திற்கு பிறகு சென்னையில், ஜூன் மாதத்தில் இவ்வாறு அதிக அளவு மழை பெய்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் ஜூன் மாதம் பெய்த மழையின் அளவு இயல்பை விட அதிகரித்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு திருவள்ளூர் போன்ற மாவட்டங்களிலும் மழை பெய்துவந்ததால் அங்கு நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
மேலும் இன்று மழை தொடர்ந்து பெய்து வருவதை அடுத்து திருப்பத்தூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களுக்கும் இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஜூன் மாதத்தில் தற்போது வரை பெய்த மழை 162.2 மி.மீ என பதிவாகியுள்ளது. வழக்கமாக 41.1 மி.மீ அளவு வரை மழை பெய்யும் நிலையில் தற்போது 162.2மி.மீ பெய்து, இயல்பை விட 295% அதிக மழை பெய்துள்ளதாக வானிலைமையம் தகவல் தெரிவித்துள்ளது.