செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவை சிகிச்சை – அமைச்சர் தகவல்
நாளை காலை காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை என அமைச்சர் தகவல்.
சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த வாரம் அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு கைது செய்யப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, ரத்தக்குழாய்களில் மூன்று அடைப்புகள், இதய அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இதனால், தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி கோரிய நிலையில், சென்னை உயர்நீதிமன்றமும் அனுமதி அளித்தது. அதன்படி, அமலாக்கத்துறை காவலில் சென்னை காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விரைவில், செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் அதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது எனவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், காவேரி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அதிகாலை இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட வாய்ப்புள்ளது. அறுவை சிகிச்சை செய்வதற்கான உடல் தகுதியை நேற்று இரவு பெற்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி. காவேரி மருத்துவனையில் செந்தில் பாலாஜிக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றார்.
மேலும், தமிழ்நாட்டின் அரசு மருத்துவர்கள், இந்தியா முழுவதும் உள்ள இஎஸ்ஐ மருத்துவர்கள் உள்ளிட்ட அனைவரைது நேர்மை தன்மையை சந்தேகிக்கிறது அமலாக்கத்துறை. விசாரணையில் இருந்து காத்துக்கொள்ள யாராவது இருதய அறுவை சிகிச்சை செய்து கொள்வார்களா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.