கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்கிறார் நிதிஷ் குமார்!
திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திருவாரூரில் ரூ.12 கோடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று திறந்து வைக்கிறார். தயாளும்மாள் அறக்கட்டளை சார்பில் காட்டூரில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக கோட்டம் கட்டப்பட்டுள்ளது.
7,000 சதுர அடி பரப்பளவில் ரூ.12 கோடி செலவில் திருவாரூர் ஆழித்தேர் வடிவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. கோட்டத்தில் கருணாநிதி சிலை, முத்துவேலர் நூலகம், பழைய புகைப்படங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன. கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைக்கிறார். மேலும், கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி உருவச்சிலையை முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.