கர்நாடக மேலவை இடைத்தேர்தல்..! காங்கிரஸ் வேட்பாளராக ஜெகதீஷ் ஷெட்டர் அறிவிப்பு..!
கர்நாடக மேலவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஜெகதீஷ் ஷெட்டர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எம்.எல்.ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கர்நாடக மேலவை இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வேட்பாளராக, ஜெகதீஷ் ஷெட்டர் போட்டியிடுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், திப்பண்ணப்பா கமக்னூர் மற்றும் என்.எஸ். போசராஜு ஆகியோரையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
முன்னதாக, நடைபெற்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வியடைந்த நிலையில், தற்பொழுது மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.