எண்ணி 10 படங்கள் மட்டுமே இயக்குவேன்.! ஷாக் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.!
வங்கி பணியில் இருந்து சினிமா மேல் இருந்த காதலால், பணியை விட்டுவிட்டு திரையுலகிற்குள் நுழைந்த லோகேஷ் கனகராஜ், குறும்படங்கள் வாயிலாக கிடைத்த அனுபவத்தைக் கொண்டு மாநகரம் படத்தை இயக்கியிருந்தார். பின்னர், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
சமீபத்திய தனியார் ஊடக நேர்காணல் ஒன்றிக்கு பேட்டியளித்த லோகேஷ் கனகராஜ், LCU பற்றி 20 ஆண்டுகளுக்கு பிளான் இருப்பதாக கூறப்படுகிறது, அது பற்றி என்ன சொல்கிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ், நிறைய படங்கள் இயக்க வேண்டும் என்றெல்லாம் நான் ஆசைப்பட்டதில்லை, நிறைய நாட்கள் சினிமாவில் இருக்க வேண்டும் என்ற திட்டமும் என்னிடம் இல்லை.
சொல்லப்போனால், 10 படங்கள் இயக்கிவிட்டு சினிமாவில் இருந்து வெளியேறி விடுவேன் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு ஷாக்கிங் தகவலை பகிர்ந்து கொண்டார். விஜய் நடிப்பில் வெளியாகவிருக்கும் லியோ லோகேஷ் இயக்கும் ஐந்தாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், லியோ நிச்சயம் மாஸ்சாக இருக்கும், படத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் உண்டு, விக்ரம் திரைப்படத்தில் முக்கியமான சர்ப்ரைஸ் லீக் ஆனது. ஆனால் லியோவில் அப்படி நடக்காது. ஜூன் 22ம் தேதி மிக பெரிய சர்ப்ரைஸ் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.