மழை நீர் பாதிப்பு – வாட்ஸ்அப் எண்ணை வெளியிட்ட செங்கல்பட்டு ஆட்சியர்..!

IMD Rain TN Puducherry

செங்கல்பட்டு ஆட்சியர் மழைநீர் பாதிப்புகளை  தெரிவிக்க வாட்சப் எண்ணை வெளியிட்டுள்ளார்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என்றும், இந்த 9 மாவட்டங்களுக்கும் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளது.  இதனையடுத்து செங்கல்பட்டு ஆட்சியர் மழைநீர் பாதிப்புகளை  தெரிவிக்க வாட்சப் எண்ணை வெளியிட்டுள்ளார். 9444272345 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு மழை பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவிக்கலாம்  தெரிவிக்காட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்