இந்த 5 நடிகர்களுக்கு ரெட் கார்ட்? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு…
திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு முறையான ஒத்துழைப்பு வழங்காத சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, அதர்வா ஆகிய 5 நடிகர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு எடுத்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.
மேலும், நோட்டீசுக்கு முறையான பதில் அளிக்கவில்லை என்றால், அவர்களுடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை எனும் நோக்கில் ‘ரெட் கார்டு’ விதிக்க, சங்கத்தின் பொதுக்குழுவில் திட்டமிடப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கம், என் ராமசாமி தலைமையில், பொதுக்குழு கூட்டம் ஒன்று நடைபெற்றதாகவும், அப்போத நடிகர் சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உட்பட சில நடிகர்கள் மீது குற்றசாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.
அதாவது, இயக்குனர் கோகுல் இயக்கத்தில் வெளியான கொரோனா குமார் படத்திலிருந்து வெளியேறியதற்காக சிம்புவுக்கும், லைகா புரொடக்சன் நிறுவனத்திடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத விஷால், படப்பிடிப்புக்கு அட்வான்ஸ் வாங்கி கொண்டு தயாரிப்பாளர்களிடம் தேதி கொடுக்காமல் எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, அதர்வா ஆகியோருக்கு ‘ரெட் கார்டு’ விதிக்க உள்ளதாக கூறப்படுகிறது.