பங்குச்சந்தை சரிவு..! சென்செக்ஸ் 63,331 புள்ளிகளாக வர்த்தகம்..!

sensex

பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 52.71 புள்ளிகள் குறைந்து 63,331 ஆகவும், என்எஸ்இ (NSE) நிஃப்டி 18,800 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் 400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து வர்த்தகமாகி வந்தது. வாரத்தின் 5வது நாளான இன்றும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நாளில் 63,474 புள்ளிகள் எனத் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ (BSE) சென்செக்ஸ் 52.71 புள்ளிகள் அல்லது 0.083% என குறைந்து 63,331 புள்ளிகளாக வர்த்தகம் ஆகிறது.

மேலும், தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ (NSE) நிஃப்டி 25.40 புள்ளிகள் அல்லது 0.13% குறைந்து 18,800 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகிறது. முந்தைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 63,384 புள்ளிகளாகவும், நிஃப்டி 18,826 புள்ளிகளாகவும் வர்த்தகம் நிறைவடைந்தது.

பஜாஜ் ஃபின்சர்வ், டைட்டன் கம்பெனி, லார்சன் & டூப்ரோ, பஜாஜ் ஃபைனான்ஸ், சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. கோடக் மஹிந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இண்டஸ்இண்ட் வங்கி, விப்ரோ லிமிடெட் உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்