மோடிக்கும் பயமில்லை.. EDக்கும் பயமில்லை… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு.!

Minister Udhayanidhi stalin

மோடிக்கும் பயப்பட மாட்டோம், EDக்கும் பயப்பட மாட்டோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று புதுக்கோட்டை கூட்டத்தில் பேசியுள்ளார். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை  கொண்டாடுவதற்காக, அதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் புதுக்கோட்டையில் நேற்று மாலை மிகப்பெரிய பாராட்டு விழா நடைபெற்றது. இந்த பாராட்டு விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழகத்தில் நடத்த விடாமல் ஒரு கும்பல் போராடியது. ஆனால், ஜல்லிக்கட்டு போட்டியை மீண்டும் தமிழகத்தில் நடத்தப்படுவதற்கு காரணம் இளைஞர்கள் நடத்திய போராட்டம் தான் என அனைவரும் அறிவர். தற்போது அரசியலில் அந்த பாசிச கட்சி ஜல்லிக்கட்டை ஆட ஆரம்பித்துள்ளார்கள். ஆனால் அதை கூட அவர்களால் நேர்மையாக ஆட முடியவில்லை. பின்வாசல் வழியாக வருகின்றனர். ஜல்லிக்கட்டு பொறுத்த வரை வாடிவாசல் வழியாகத்தான் காளைகள் வரும். ஆனால் பாசிச கட்சிகள் புறவாசல் வழியாக தான் வருகிறது என விமர்சித்தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் நுழைய பாஜக முயற்சி செய்து வருகிறது. அதற்கு பாஜகவின் கிளையாக அதிமுகவை மாற்றி விட்டது. மத்திய அரசின் அடக்கு முறையை கண்டு திமுக என்று பயந்தது கிடையாது. எத்தனை மோடி அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழகத்தில் ஒன்றும் செய்ய முடியாது.

பாஜகவில் தொண்டர் படை என்பது வருமானவரித்துறை, அமலக்கத்துறை, சிபிஐ தான். 2014 பாஜக ஆட்சிக்குப் பிறகு அமலாக்கத்துறையினர் 121 அரசியல் தலைவர்களை விசாரித்துள்ளனர். அதில் 115 பேர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள். இப்படி தான் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணை நடத்தியுள்ளனர்.

மோடிக்கு நெருக்கமாக இருக்கும் அதானியிடம் அமலாக்கத்துறையினர் நடத்தவில்லை நாங்கள் மோடிக்கு பயப்பட மாட்டோம். இடிக்கும் (ED – Enforcement Department ) பயப்பட மாட்டோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் பாசிச கூட்டணியை விரட்டியடிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த விழாவில் பேசி முடித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்