இது தான் தந்தை பாசம்…மகனுக்கு எலும்புமுறிவு…ஸ்கூட்டியுடன் மூன்றாவது மாடிக்கு சென்ற தந்தை..!!
ராஜஸ்தானின் கோட்டா பிரிவின் மிகப்பெரிய மருத்துவமனையில் வழக்கறிஞர் ஒருவர் தன்னுடைய மகனை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக சென்று அங்கிருப்பவர்களிடம் வீல் சேர் கேட்டுள்ளார். அங்கு வீல் சேர் கிடைக்கவில்லை என்ற காரணத்தால் கோபமடைந்து, ஸ்கட்டரிலே தனது மகனுடன் லிப்ட் குள் சென்றார்.
இதனை பார்த்து ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் சற்று அதிர்ச்சியானார்கள். மேலும், இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பும் ஏற்பட்டது.இதுகுறித்து, தனது மகனை ஸ்கூட்டரில் மூன்றாவது மாடிக்கு அழைத்துச் சென்ற வக்கீல் மனோஜ் ஜெயின், பேசியதாவது ” என்னுடைய மகனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, மூன்றாவது மாடியில் இருந்து வீல் சேர் கொண்டு வர முடியவில்லை.
என்னிடம் சத்தம் வராத ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளது, எனவே, என்னுடைய மகனை அதில் கொண்டு வரவா என்று அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டேன். அப்போது அங்கிருந்த ஊழியர் சுக்லால் சம்மதம் தெரிவித்து கொண்டு வர கூறினார்கள். வக்கீல் மனோஜ் ஜெயின் முதலில் லிப்ட் உதவியுடன் ஸ்கூட்டரை தரை தளத்தில் இருந்து மூன்றாவது மாடிக்கு எடுத்துச் சென்று, மகனை உட்கார வைத்துவிட்டு லிப்ட் உதவியுடன் திரும்பி வந்தார்.
ஆனால் அவர்களை கீழே நிறுத்தியபோது, அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதன்போது, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரும் சமாதானப்படுத்தினர். இந்த விவகாரத்தில் வழக்கறிஞர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் நான் கொண்டு வந்தேன், ஆனால் இங்கே தேவ்கி நந்தன் எனது காரின் சாவியை எடுத்தார்.
#Rajasthan: Shocking video surfaced from Kota’s hospital. The lawyer climbed to the third floor by scooty. #Viralvideo #India pic.twitter.com/qZ4l9zzovV
— Akshara (@Akshara117) June 17, 2023
வக்கீல் மனோஜ் ஜெயின் முதலில் லிப்ட் உதவியுடன் ஸ்கூட்டரை தரை தளத்தில் இருந்து மூன்றாவது மாடிக்கு எடுத்துச் சென்று, மகனை உட்கார வைத்துவிட்டு லிப்ட் உதவியுடன் திரும்பி வந்தார். ஆனால் அவர்களை கீழே நிறுத்தியபோது, அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதன்போது, சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸாரும் சமாதானப்படுத்தினர். இந்த விவகாரத்தில் வழக்கறிஞர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.