எல்லாம் என்னோட நேரம்… அவுட் ஆன ஹாரி புரூக்..வைரலாகும் வீடியோ.!!
எட்ஜ்பாஸ்டனில் நடந்த ஆஷஸ் 2023 டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து பேட்டர் ஹாரி புரூக் 32(37) ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த வீடியோ தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் வீசிய பந்து ப்ரூக்கின் தொடையில் பட்டு மேலே பறந்தது. பிறகு பந்தை பிடிக்க கீப்பர் மட்டும்மின்றி பீல்டர்களும் பந்தை மேல பார்த்து தேடினார்கள். இறுதியாக பிறகு பந்து கீழே விழுந்து ஸ்டெம்பில் பட்டது.
இதன் பிறகு, புரூக் எல்லா என்னோட நேரம் என்கிற அளவிற்கு மிகவும் சோகத்துடன் ஆட்டத்தை விட்டு வெளியே சென்றார். அந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
A freak dismissal.
Live clips/Scorecard: https://t.co/TZMO0eJDwY pic.twitter.com/cIUQaANJ2x
— England Cricket (@englandcricket) June 16, 2023
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தின் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பேஸ்டன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. மேலும் நேற்று நடந்த தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி மொத்தமாக 393 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.