அம்பேத்கர், பெரியார், காமராஜர் பற்றி படியுங்கள்…நடிகர் விஜய் அட்வைஸ்.!!
மிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ் மற்றும் கல்விக்கான ஊக்கத்தொகையை நடிகர் விஜய் இன்று வழங்கி வருகிறார்.
இதற்கான விழா, சென்னை, நீலாங்கரையில் உள்ள ஒரு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. விழாவில் பேசிய விஜய் “அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றி மாணவ, மாணவிகள் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்” என முக்கிய அறிவுரையை கூறியுள்ளார்.
.@actorvijay :
I’m not an avid book reader, but recently, I started reading and I’m enjoying the process. Even when scripts come to me, I prefer to hear the narration. I request youngsters to read more, learn about Ambedkar, Periyar and Kamarajar.— Telugu Vijay Fans Club (@TVFC_Offcl) June 17, 2023
மேலும் பேசிய அவர் ” முழுமையான கல்வி பள்ளி, கல்லூரிக்கு செல்வது மட்டுமே ஆகாது. நாம் பள்ளிக்கு போய் படித்த பிறகு, அதை எல்லாம் மறந்த பிறகும், நம் மனதில் நிற்கும் சிந்திக்கும் திறன் மற்றும் குணம் மற்றும் தான் முழுமையான கல்வி ஆகும்” எனவும் தெரிவித்துள்ளார்.