600க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வைர நெக்லஸ் பரிசளித்த நடிகர் விஜய்!

Actor Vijay gifted

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600-600 மதிப்பெண் பெற்ற மாணவி நந்தினியை கௌரவித்த நடிகர் விஜய்.

நடிகர் விஜய், தனது விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இன்று பரிசு வழங்கி கௌரவிக்கும் விழா சென்னை நீலாங்கரையில் நடைபெற்று வருகிறது. இவ்விழாவில், பெற்றோர்கள், மாணவர்கள் என சுமார் 4000 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விழாவிற்கு வருகை புரிந்த நடிகர் விஜய், ஆங்காங்கே மாணவர்களுடன் அமர்ந்து உரையாற்றினார். இதன்பின் இவ்விழாவில், கல்வி குறித்து பேசிய நடிகர் விஜய், சில அரசியல் குறித்தும் பேசினார். இதனைத்தொடர்ந்து, தொகுதிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி வருகிறார்.

அப்போது, முதலில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்த திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நடிகர் விஜய். அந்த வைர நெக்லஸை மாணவியின் தாயாரிடம் கொடுத்து, அதனை அணிவிக்க செய்து பார்த்தார். இதனைத்தொடர்ந்து, மற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்து வருகிறார் நடிகர் விஜய்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்