அசுரன் வசனத்தை பேசி மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை கூறிய நடிகர் விஜய்.!!

Asuran dialogues from Thalapathy

10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ் மற்றும் கல்விக்கான ஊக்கத்தொகையை  இன்று நடிகர் விஜய் வழங்கி வருகிறார்.

இதற்கான விழா “தளபதிவிஜய்கல்விவிருது” என்ற பெயரில் தற்போது சென்னை, நீலாங்கரையில்  உள்ள ஒரு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் ” என் நெஞ்சில் குடியிருக்கும் என ஆரம்பித்து அறிவுரை கூற தொடங்கினார்.

விழாவில் அவர் முக்கியமாக பேசிய ஒன்று என்னவென்றால், ” அசுரன் திரைப்படத்தில் தனுஷ் பேசும் வசனத்தை சுட்டி காட்டி அறிவுரை வழங்கினார். நான் சமீபத்தில் ஒரு படத்தைப் பார்த்தேன் (அசுரன் கிளைமாக்ஸ் வசனம்) அதிலிருந்து ஒரு வசனம் என்னை மிகவும் பாதித்தது.

நம்ம கிட்ட காடு இருந்தா எடுத்துப்பாங்க…படிப்பை மட்டும் எடுத்துக்கவே மாட்டாங்க இது மிகவும் முக்கியமானது என்று நான் உணர்கிறேன். மக்கள் உங்களிடம் ‘நல்ல பாடி, நல்ல பாடி’ என்று தொடர்ந்து கூறினாலும் அதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்