டிஎன்பிஎல் தொடரின் முதல் சதம்..! அதிரடி காட்டி அசத்திய அஜிதேஷ் குருசுவாமி..!
நெல்லை அணி வீரர் அஜிதேஷ், டிஎன்பிஎல் தொடரின் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகள் போலவே நடைபெறும், டிஎன்பிஎல் தொடரின் 7-வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் கோவையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.
இதில் டாஸ் வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் களமிறங்கிய கோவை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இதன்பின், 182 ரன்கள் என்ற இலக்கில் நெல்லை அணி வீரர்கள் களமிறங்கி பொறுப்பாக விளையாடினர்.
நெல்லை அணியில் அதிரடியாக விளையாடிய அஜிதேஷ் குருசுவாமி, 60 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் என விளாசி தொடரின் முதல் சதத்தை பதிவு செய்தார். முடிவில், நெல்லை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்து, 4 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணியை வென்றது.
The Champ is here!????#TNPL2023????#lkkvsnrk#TNPLonstarsports#TNPLonfancode#NammaAatamAarambam????#NammaOoruNammaGethu???????? pic.twitter.com/GyXUEbFfpm
— TNPL (@TNPremierLeague) June 16, 2023