2007, 2012 இல் உறுதியளித்ததை போல நடிகர் விஜய் நடந்துகொள்ள வேண்டும்.! அன்புமணி ராமதாஸ் வருத்தம்.!  

Anbumani ramadoss

நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிபப்தை தவிர்க்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் டிவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. இதனை முன்னிட்டு இப்படத்தின் முதல் பாடல் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என பட குழு அறிவித்து உள்ளது.

இந்த முதல் பாடல் வெளியாகும் என்ற அறிவிப்பு குறித்த புகைப்படம் இணையத்தில் நேற்று வெளியானது. அதில் விஜய், தனது வாயில் சிகரெட் வைத்தபடி புகைப்படத்தில் இருக்கிறார். இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பக்கத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளின் நடிப்பதை தவிர்க்க வேண்டும். லியோ திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்று இருப்பது வருத்தம் அளிக்கிறது. விஜய் திரைப்படங்களை குழந்தைகள் முதல் மாணவர்கள் என அனைவரும் பார்க்கிறார்கள். அவர்கள் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியினை பார்த்துவிட்டு அப்பழக்கத்திற்கு ஆளாகி விடக்கூடாது. பொது மக்களை புகைப்பலகத்திருந்து பாதுகாக்கும் சமூக பொறுப்பு விஜய்க்கும் உண்டு

ஏற்கனவே 2007 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என உறுதி அளித்ததை போலவே திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளின் நடிப்பதை விஜய் தவிர்க்க வேண்டும் என அந்த ட்விட்டரில் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்