முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்தால் ரொக்க பரிசு.!
மத்தியப் பிரதேசத்தில் உள்ள வலதுசாரிக் குழு ஒன்று முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்துகொள்ளும் இந்து ஆண் மகனுக்கு ரூ.11,000 ரொக்க பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்யும் இந்து ஆணுக்கு ரூ.11,000 பரிசு வழங்கப்படும் என்று இந்து தர்மசேனா தலைவர் யோகேஷ் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
அவர், “லவ் ஜிகாத் மூலம் இந்து பெண்களை முஸ்லிம் ஆண்கள் மதம் மாற்றுவது மிகவும் கவலைக்குரிய விஷயம். இந்துக்களில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் பற்றாக்குறை உள்ளது. எனவே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
இந்து தரம் சேனாவின் தலைவர் யோகேஷ் அகர்வால் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதில், “இஸ்லாமிய ஆண்கள் லவ் ஜிகாத் மூலம் இந்து பெண்களை மதம் மாற்றுவது மிகவும் கவலைக்குரிய விஷயம். இந்துக்களில் ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் பற்றாக்குறை ஏற்கனவே உள்ளது.
இதை மனதில் வைத்து இந்து தரம் சேனா அமைப்பினர் நமது இந்து மகள்களை மட்டும் காப்பாற்றாமல் முஸ்லிம் பெண் குழந்தைகளை பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளனர். எனவே முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்யும் இந்து ஆண்களுக்கு ரூ.11,000 வெகுமதி அளிக்கிறோம் என்று அகர்வால் கூறினார்.