செந்தில் பாலாஜி அமைச்சராகவே தொடர்வார்.! தமிழக அரசு அரசாணை.!
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் மதுவிலக்கு ஆயத்ததீர்வை மற்றும் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அண்மையில் அமலாக துறையினர் கைது செய்தனர். 15 நாட்களில் நீதிமன்ற காவலில் இருந்து அவரை நேற்று 8 நாள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க உயர் சென்னை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அவர் தற்போது காவேரி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்து வந்த மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை ஆகிய துறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்து ஒப்புதல் பெற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைத்தார்.
இந்த பரிந்துரைக்கு முதலில் ஒப்புக் கொள்ளாமல் அதில் தவறுகள் இருப்பதாக கூறி கோப்புகளை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி. உடனடியாக தவறுகள் திருத்தப்பட்டு மீண்டும் ஆளுநர் ஒப்புதல் பெற அமைச்சரவை மாற்றம் குறித்த கோப்புகள் ஆளுனருக்குக் அனுப்பப்பட்டன.
இதற்கிடையில் ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியான செய்தி குறிப்பில், அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கிரிமினல் வழக்கில் கைது செய்து உள்ளதால் அவர் அமைச்சர் பதவியில் தொடர முடியாது என குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை தமிழக அரசு ஒரு அரசாணையை வெளியிட்டு உள்ளது. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி பொறுப்பில் இருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறைகள் அமைச்சரின் உடல்நலம் கருதி தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகிய அமைச்சர்களுக்கு பிரித்து வழங்கி அரசு அணை வெளியிட்டு உள்ளது. மேலும் அதில் செந்தில் பாலாஜி இலக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சராக செந்தில் பாலாஜி தொடரக்கூடாது என ஆளுநர் குறிப்பிட்ட பிறகும் தமிழக அரசு வெளியிட்ட இந்த அரசாணை தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது