கேரளாவில் கனமழைக்கு 21 பேர் உயிரிழப்பு! 591 வீடுகள் சேதம்!மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு!
கேரள மாநிலத்தில் மட்டும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தொடர் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி, வயநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கனமழைக்கு இதுவரை 591 வீடுகள் சேதம் அடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.