முறைகேடு புகார் எழுந்ததைத் தொடர்ந்து மத்திய அரசு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது..!

Default Image

உடல் உறுப்பு தானத்தில் முறைகேடு நடைபெறுவதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து மத்திய அரசு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது.

மூளைச்சாவு அடைபவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை தானமாக பெற்று நடைபெறும் அறுவை சிகிச்சை தமிழகத்தில் அதிகளவில் நடைபெறுகிறது. இந்நிலையில், இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக தானமாக பெறப்படும் இதயம், அதிகளவில் வெளிநாட்டினருக்கே பொருத்தப்படுவதாக, NOTTO என்ற அமைப்பு புகார் கூறியிருக்கிறது.

தானமாக பெற்று நடைபெறும் இதய மாற்று சிகிச்சையின் மொத்த எண்ணிக்கையில், 25 சதவிகித அளவு வெளிநாட்டினருக்கே பொருத்தப்படுவதாகவும், 33 சதவிகித அளவு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பயனடைவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், சுகாதார சேவைகள் இயக்குநரகத்தின் அவசரக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில், வெளிநாட்டினர் உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கான விதிமுறைகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்