ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார் – சபாநாயகர் அப்பாவு
முதலமைச்சரின் கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது வேதனையாக உள்ளது என சபாநாயகர் அப்பாவு பேட்டி.
சபாநாயகர் அப்பாவு முதலமைச்சரின் கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை ஒதுக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு தான் உள்ளது.
ஒருவர் தண்டனை பெற்றால் மட்டுமே பதவி வகிக்க முடியாது. முதலமைச்சரின் முடிவிற்குள் யாரும் தலையிடக்கூடாது. யாருக்கு எந்த துறை கொடுக்க வேண்டும் என்பது அவரின் விருப்பம். முதலமைச்சரின் கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்பியது வேதனையாக உள்ளது. அதை தவிர்த்திருக்க வேண்டும்; ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து இந்திய அரசியல் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார் என தெரிவித்துள்ளார்.