மக்கள் தங்கள் பயண விவரங்களை சமூக ஊடகங்களில் தெரிவிக்கக் கூடாது..! அரசு எச்சரிக்கை..!

Governmentwarning

மக்கள் தங்கள் பயண விவரங்களை சமூக ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என அரசு எச்சரித்துள்ளது.

நாட்டில் சைபர் கிரைம்களைத் தவிர்ப்பதற்காக மக்கள் தங்கள் பயண விவரங்கள் எதையும் சமூக ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது. தற்பொழுது இருக்கும் காலகட்டத்தில் பெரும்பாலான சைபர் தாக்குதல்கள், மக்கள் சமூக ஊடகங்களில் வெளியிடும் தகவல்களால் நடைபெறுகிறது.

அதனை தடுப்பதற்காக, இணைய பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், உங்கள் தகவல் சைபர் குற்றத்திற்கு பயன்படுத்தப்படலாம். எனவே, உங்கள் பயண விவரங்கள் எதையும் எதையும் சமூக ஊடகங்களில் தெரிவிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், ஆன்லைன் பண மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலமோ அல்லது http://cybercrime.gov.in என்ற இணையதளத்தில்  புகார் அளிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்