முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்-க்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்!
பாலியல் தொல்லை வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு.
பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், விழுப்புரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை தொடர்ந்து, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன் வழங்கி விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலியல் தொல்லை வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.