ஆஸ்திரேலிய தொடர் தான் கடைசி டெஸ்ட் தொடர் … மனைவியிடம் கூறிய அஷ்வின்.!

Ashwin Aus Series

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் தான் தனக்கு கடைசி தொடராக அமையலாம் என அஷ்வின் தன் மனைவியிடம் கூறியதாக பேட்டி.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலருமான ரவிச்சந்திரன் அஷ்வின், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் விரைவில் எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்று அஞ்சியதாக கூறியுள்ளார்.

இது குறித்து  இந்தியன்  எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் நான் கடந்த 2022 டிசம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கால் முட்டுப் பகுதியில் ஏற்பட்ட வலியின் காரணமாக எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக ஒரு முடிவு எடுக்க நேர்ந்தது என்று கூறினார்.

சில காலமாக கால் முட்டு பகுதியில் தொடர்ந்து ஏற்பட்டு வலியின் காரணமாக அஷ்வின் தனது பவுலிங் செய்கையில்(Action) ஆஸ்திரேலிய தொடரின்(2023) போது மாற்றம் செய்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக வெற்றிகரமாக இருந்து வந்த தனது பவுலிங் செய்கையை, அஷ்வின் கால் முட்டு வலியின் காரணமாக மாற்ற நேரிட்டது.

மேலும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு நான் என் மனைவியிடமும் இது குறித்து கூறியிருந்தேன், வரும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தனக்கு கடைசி தொடராக அமையலாம் என்று கூறியதாக அஸ்வின் தெரிவித்தார். எனக்கு முட்டியில் சில பிரச்சனைகள் இருக்கிறது, பந்துவீசும்போது அதிக அழுத்தம் முட்டியில் விழுவதினால் நான் எனது பவுலிங் செய்கையை சிறிது மாற்ற இருக்கிறேன் என அவர் கூறியிருக்கிறார்.

Ash aus series
Ash aus series [Image – TOI]

இந்த பௌலிங் செய்கையை மாற்றுவது குறித்து அஷ்வின் கூறும்போது, நான் கடந்த நான்காண்டுகளாக பந்து வீசி வந்த பவுலிங் ஆக்சனை திடீரென்று மாற்றுவது முட்டாள்தனமாக இருக்கலாம். ஆனால் நான் தற்போது என்னுடைய பவுலிங் ஆக்சனை 2013-14 ஆம் ஆண்டுகளில், வீசியது போல மாற்றம் செய்யப் போவதாக அஷ்வின் தெரிவித்தார்.

Ash bowl Action
Ash bowl Action [Image – BCCI]

மேலும் இந்த புது பௌலிங் செய்கையும் அஷ்வினை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை, அவர் வழக்கம்போல் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்கள்(25) வீழ்த்தினார். இது குறித்து அஷ்வின் கூறும் போது நான் என்னைப் பற்றி இந்த விஷயத்தில் மிகவும் பெருமைப்படுகிறேன்.

எனது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் சில முக்கிய முடிவுகளை எடுக்க நேரிடும் பொழுது, நான் அதைப் பற்றி யோசிக்காமல் தைரியமாக ஒரு பந்துவீச்சாளராக இந்த சவாலை எதிர்கொண்டு இந்த கடின முடிவை எடுத்தேன். 36 வயதில் என்னால் பவுலிங் செய்கையில் மாற்றம் செய்து பந்து வீச முடியும் என்பதை விட மிகப்பெரிய சவால் என் வாழ்க்கையில் இருந்ததில்லை.

என்னால் பழைய பவுலிங் ஆக்ஷனில் பந்துவீசி அதில் 15, 16 விக்கெட்டுகள் எடுப்பது எளிது என்றாலும் அதில் எனக்கு திருப்தி ஏற்படுவதில்லை, அணிக்காக ஏதாவது புதிதாக செய்து கொண்டிருப்பதில் என்னை நான் எப்பொழுதும் தயார் படுத்திக் கொண்டே இருப்பேன் என்று அஷ்வின் மேலும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்