சட்ட வழிகாட்டுதல் படி விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவார்!பிரிட்டன் அமைச்சர்
பிரிட்டன் அமைச்சர் பாரோன்னஸ் வில்லியம்ஸ் (( Baroness Williams )), முறையான சட்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தொழிலதிபர் விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவார் என தெரிவித்திருக்கிறார்.
இந்தியா வந்துள்ள அவர், உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜுஜூவை சந்தித்துப் பேசினார். அப்போது, விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவருவது குறித்து இருவரும் விவாதித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரோன்னஸ் வில்லியம்ஸ், முறையாக சட்ட விதிமுறைகளின் அடிப்படையில், விஜய் மல்லையா நாடு கடத்தப்படுவது முன்னெடுக்கப்படும் என்றார். அதேநேரம், வைர வியாபாரி நீரவ் மோடி குறித்த கேள்விக்கு அவர் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.