தைரியமிருந்தால் வழக்கை நேரடியாக நீதிமன்றத்தில் சந்திக்க வேண்டும்.! முதல்வர் பாணியில் இபிஎஸ் பதில்.!

நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட விடியோவுக்கு பதில் கூறும் விதமாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ மூலம் பதில் கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை குறித்து நேற்று வீடியோ மூலம் தனது கண்டனத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்து இருந்தார். அதில் பாஜக குறித்தும், அதிமுக, மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் தனது விமர்சனங்களை முன்வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்த வீடியோ பதிவை அடுத்து அதற்கு பதில் கூறும் விதமாக அதே போல எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ மூலம் தனது பதிலையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். அதில், செந்தில் பாலாஜி ஊழல் குறித்து அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் பல்வேறு கருத்துக்களை முதல்வர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் என்னையும் பற்றி தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை நடவடிக்கை என்பது, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று கொண்டு இருக்கும் போது, இன்னும் 2 மாதத்தில் செந்தில் பாலாஜி மீதான வழக்கை நடத்தி முடிக்கவிட்டால் உச்சநீதிமன்றம் சிறப்பு குழு அமைத்து விசாரிக்கும் என கூறிய நிலையில் தான், அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி வீடுகள், தலைமை செயலக அலுவலகத்தில் சோதனை நடைப்பெற்றது. அவரும் விசாரிக்கப்பட்டார்.
அமலாக்கத்துறை சோதனைக்கு முன்னர் செந்தில் பாலாஜி பேசுகையில், நான் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என கூறினார். ஆனால் அவர் அப்படி நடந்துகொள்ளை என செய்திகள் வெளியாகின. அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், உரிய நேரத்தில் அவர் ஆஜராகவில்லை. இருந்த போதும் கைது நடவடிக்கையின் போது உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற ஓமந்தூரரர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இப்படிப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஆதராக முதல்வர் பரிந்து பேசுகிறார். பதற்றத்தோடு பேசுகிறார். மக்கள் எதற்காக ஆட்சியை கொடுத்தார்கள் ? மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றே உங்களுக்கு ஆட்சியை கொடுத்தார்கள். ஆனால் நீங்கள் மக்களை பற்றி சிந்திக்கவில்லை. மு.க.ஸ்டாலின் திறமையற்ற முதல்வர். அவருடைய அமைச்சரவையில் இருக்கும் பழனிவேல் தியாகராஜன் அவர்களே ஒரு ஆடியோவில் , 30 ஆயிரம் கோடியை வைத்து கொண்டு என்ன செய்வது என தெரியாமல் இருப்பதாக தெரிவித்தார். அந்த பணம் செந்தில் பாலாஜி மூலமாக கிடைத்த பணம் என செய்திகள் வெளியாகி வருகின்றன.
எங்கே அந்த பணம் பற்றி செந்தில் பாலாஜி கூறிவிடுவாரோ என்ற பயத்தில் தான் அமைச்சர்கள் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்திக்க நேரில் வந்தார்கள். செந்தில் பாலாஜி வாய் திறந்தாள் ஆட்சி பாதிக்கும் என முதல்வரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
இதற்கு முன்பு திமுக எம்எல்ஏக்கள் ரெய்டில் சிக்கினார்கள் . அப்போது ஒன்றும் பேசவில்லை. திமுக எம்பிகளாக இருக்கும் அ.ராசா, கனிமொழி அவர்களை ஊழல் வழக்கில் கைது செய்து மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சியில் இருக்கும் போதே திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது தனது சகோதரியை கூட திகார் சிறையில் நேரில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்தாரா என கேள்வி எழுப்பினர்.
6000 டாஸ்மாக் கடைகளில், 5600 பார்களில் சுமார் 3000 பார்களில் இரண்டாண்டுகளாக டெண்டர் விடவில்லை. காவல்துறை இதனை கண்டுகொள்ளவில்லை. விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தால் 23 பேர் இறந்துவிட்ட்டனர். பல்வேரு இடங்களில் முறைகேடாக பார் நடைபெற்று வருகிறது எனவும் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
தன் மீதான ஊழல் வழக்கு பற்றி பேசிய ஐபிஎஸ், டெண்டர் வழக்கில் 4000 கோடி ஊழல் என உயர்நீதிமன்றத்தில் திமுகவை சேர்ந்த ஆர்எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். அதில் லஞ்ச ஒலிப்பு துறை விசாரித்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தங்கல் செய்த்தனர். லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கையை பிரித்து கூட பார்க்காமல், சிபிஐ விசாரிக்க உய்ரநீதிமன்றம் உத்தரவிட்டது. உடனே உச்சநீதிமன்றம் சென்று இதற்கு தடை வாங்கினேன்.
மீண்டும் உயர்நீதிமன்றத்திலேயே வழக்கு நடத்த வேண்டும் என்றும், லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கையை கொண்டு வழக்குவிசாரிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியதும் ஆர்.எஸ்.பாரதி வழக்கை வாபஸ் பெற்று கொள்வதாக தெரிவித்தார்.அதே போல, அமலாக்கத்துறை விசாரிக்கும் இந்த வழக்கை தைரியமாக முதல்வர் சந்திக்க வேண்டும். நேரடியாக நீதிமன்றத்தில் நிரபராதி என்று நிரூபித்து வெளியே வார வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டார்.
மேலும், அதிமுகவை சீண்டி பார்க்க வேண்டாம். நாங்கள் பாஜக அடிமை துன்று சொல்கிறார்கள். 1999இல் திமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்து தனது எம்பிக்களை பாஜக அமைச்சரவையில் இடம் பெற வைத்தது. அதிமுக எவருக்கும் அடிமையானவர்கள் அல்ல. என அந்த வீடியோவில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் .