Tamil News Live Today: பிபர்ஜாய் புயலால் குஜராத்தின் 1,000 கிராமங்களில் மின் தடை !
பிபர்ஜாய் புயல் காரணமாக குஜராத்தில் பல்வேறு இடங்களில் பல மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்ததால் , 1,000 கிராமங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கட்ச் மாவட்டத்தில் கிட்டத்தட்ட 40% மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
NDRF டைரக்டர் ஜெனரல் (டிஜி) அதுல் கர்வால் கூறுகையில், குஜராத்தில் பிபர்ஜாய் புயலால் எந்த உயிரிழப்பும் இல்லை, ஆனால் 23 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவித்தார்.