WTC25இல் இந்தியா-பாக் டெஸ்ட் தொடர் இல்லை… ஐசிசிக்கு ஆகாஷ் சோப்ரா கேள்வி.!

Ind-Pak Test Series

ஐசிசி நிகழ்வான WTC தொடரில் இந்தியா-பாக் தொடர் இல்லாதது குறித்து ஆகாஷ் சோப்ராகேள்வி.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 க்கான போட்டி அட்டவணையில், இந்தியா- பாகிஸ்தான் டெஸ்ட் தொடர் இடம்பெறாதது குறித்து, முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனனையாளரூமான ஆகாஷ் சோப்ரா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கேள்வியெழுப்பியுள்ளார். WTC தொடர் ஐசிசியின் நிகழ்வுதானே அல்லது இருதரப்பு டெஸ்ட் தொடர் போட்டியா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25க்கான போட்டித்தொடர் மூன்றாவது WTC பட்டத்திற்காக நடத்தப்படும் டெஸ்ட் உலகக்கோப்பை தொடராகும். இதற்கான ஒவ்வொரு அணிகளின் ஹோம் மற்றும் அவே டெஸ்ட் தொடர்களுக்கான பட்டியல் வெளியானது. இதில் மூன்றாவது WTC மேஸ் க்கான போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே டெஸ்ட் தொடர் ஏதும் இல்லை.

WTC2023-25
WTC2023-25 [Image-Twittr/@ICC]

இது குறித்து கூறிய ஆகாஷ் சோப்ரா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் WTC கோப்பைக்கான தொடர்களில் மோதவில்லை என்றால் அது எப்படி ஐசிசி நிகழ்வாகும், அது இரு தரப்பு டெஸ்ட் போட்டி தொடர் என்று சர்வ்தேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.

WTC தொடர்களில் ஒரு அணி அனைத்து அணிகளுடனும் விளையாட முடியாது என்றாலும் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியா-பாக் டெஸ்ட் தொடர் ஏதும் நடத்தப்படவில்லை, தற்போது அடுத்த இரண்டு ஆண்டுக்கான டெஸ்ட் தொடர்களிலும் இந்தியா-பாக் போட்டி இல்லாததது முறையல்ல. இந்தியா, பாகிஸ்தான் இடையே பொது மைதானங்களிலாவது டெஸ்ட் தொடரை நடத்தியிருக்கலாம் என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்