கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரை.!

CM Stalin Speech

கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில், 15 மாதங்களில் கட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் உரை.

முதல்வர் உரை:

சென்னை கிண்டியில் 1000 படுக்கை வசதிகளுடன், 230 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். திறந்து வைத்த பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த கிங்க்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் அமைந்துள்ள இம்மருத்துவமனை வெறும் 15 மாதங்களில் கட்டி முடித்துள்ளோம்.

15 மாதங்களில் கட்டப்பட்டுள்ளது:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2015இல் அடிக்கல் நாட்டப்பட்டாலும், இன்னும் இரண்டாவது செங்கல் கூட எடுத்துவைக்காத நிலையில் 15 மாதங்களில் கலைஞர் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். கலைஞர் என்றால் கிங் தான், கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையும் கிங்க்ஸ் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் தான் அமைந்துள்ளது.

உலகத்தர மருத்துவமனை:

அனைத்து விதமான நவீன வசதிகளுடன் கூடிய உலக தரத்தில் 10 அறுவை சிகிச்சை அரங்குகளுடன் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளன. மதுரையில் கலைஞர் நூலகம் அடுத்தமாதம் திறக்கப்படவுள்ளது எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஜனாதிபதியை தடுத்து விட்டனர்:

மருத்துவ கட்டமைப்பில் முதல் மாநிலமாக நம் தமிழ்நாடு திகழ்கிறது, குடியரசுத்தலைவர் இந்த கலைஞர் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை திறக்கவேண்டிய நிலையில் அவரை திறக்கவிடாமல் தடுத்துவிட்டனர். மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 1.40 கோடி மக்கள் பயனடைந்துள்ளதாக கூறிய முதல்வர், ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மருத்துவ திட்டங்கள் தற்போதும் தொடர்வதாக கூறினார்.

கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி:

மேலும் வேலூர் அருகே சிகிச்சைக்கு வருபவர்கள் தங்குவதற்காக 250 படுக்கைகள் கொண்ட தங்கும் விடுதி கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். சத்துவாச்சேரி அருகே சிகிச்சைக்கு வருபவர்களுக்காக, குறைந்த கட்டணத்தில் 2 ஹேக்டேரில் 250 படுக்கை வசதி கொண்ட கலைஞர் நூற்றாண்டு தங்கும் விடுதி கட்டப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Kerala Govt Pongal holidays
Sanjay Bangar Sanju Samson
pongal (1) (1)
jallikattu price
JammuKashmir
rain heavy