தமிழகத்தில் பழைய பாஜக போல் தற்போதைய பாஜக இல்லை – அண்ணாமலை

annamalai bjp

செந்தில் பாலாஜி கைதுக்கு பின் முதல்வரின் நடவடிக்கை இயல்பானதாக இல்லை என அண்ணாமலை பேட்டி.

தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாத்துறையால் கைது செய்யப்பட்டது அடுத்து, பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்த சமயத்தில், செந்தில் பாலாஜி கைது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவு  ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், பாஜகவை கடுமையாக விமர்சித்து பேசிய முதல்வர், செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கை அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல், பாஜக தலைமை அமலாக்கத்துறை மூலம் அரசியல் செய்ய நினைக்கிறது. வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை வைத்து மிரட்டுகிறது. மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால், குனிய மாட்டோம். நிமிர்ந்து நிற்போம்.

எல்லா அரசியலும் எங்களுக்கு தெரியும், திருப்பி அடித்தால் தாங்க முடியாது. திமுக நடத்திய போராட்டங்கள் எப்படிப்பட்டது என்று வரலாற்றை புரட்டி பாருங்கள். திமுகவை சீண்டி பார்க்க வேண்டாம், இது மிரட்டல் அல்ல எச்சரிக்கை என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நீதிமன்ற உத்தரவின்படியே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜி கைதான நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் வரம்பை மீறி பேசுகிறார். முதல்வரின் பேச்சில் நேர்மை இல்லை, பாஜகவினரை மிரட்டி பார்க்க வேண்டுமென நினைக்கிறார்.

அச்சுறுத்தும் விதமாக பேசியுள்ளார். 7 ஆண்டுகளுக்கு முன்னரே செந்தில் பாலாஜி ஊழல்வாதி என முதலமைச்சர் முக ஸ்டாலின் குற்றசாட்டினார். இப்போது பாதுகாக்க துடிக்கிறார். தற்போது காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பாஜக தொண்டர்களை முதலமைச்சர் நேரடியாக மிரட்டி உள்ளார், நாங்கள் எதற்கும் தயாராக உள்ளோம். தமிழகத்தில் பழைய பாஜக போல் தற்போது உள்ள பாஜக இல்லை. என்றும்  டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், ஜூலை 14ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்