பலத்த மழை தொடர்வதால் பவானி கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழையின் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, தேனி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக மழை நீடிக்கிறது.
கனமழையால், கோவை மாவட்டம் வால்பாறையில் சாலைகளில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வீட்டின் கூரை சூறைக்காற்றில் பறந்து, வீடுகளும் முற்றிலுமாக சேதமடைந்தன. பலத்த மழை தொடர்வதால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஆற்றங்கரையோரம் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.