மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிய பாடத்திட்டம் அறிமுகம்..!
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிதாக முதுகலை தொல்லியல் துறை பாடத்திட்டம் அறிமுகம்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிதாக முதுகலை தொல்லியல் துறை பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து துணைவேந்தர் சந்திரசேகர் செய்தியாளர்களுங்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புதிதாக முதுகலை தொல்லியல் துறை பாடத்திட்டம் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய முதுகலை தொல்லியல் துறை படிப்பு இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இத்தாலி நாட்டின் பாரி பல்கலைக்கழகத்துடன் தொல்லியல் துறை படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் தெரிவித்துள்ளார்.