அவரோட படம் என்றால் கதை கேட்காமல் கூட நடிப்பேன்…பிரியா பவானி சங்கர் ஓபன் டாக்.!!
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து தனது கடின முயற்ச்சியால் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருபவர் தான் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தற்போது பல பெரிய படங்களில் நடித்தும், நடிக்க கமிட் ஆகியும் வருகிறார். அந்த வகையில், இவருடைய நடிப்பில் பொம்மை திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதனை முன்னிட்டு பொம்மை படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ள பிரியா பவானி சங்கர் பொம்மை படத்தில் நடித்த காரணத்தை பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். பேட்டியில் பேசிய அவர் ” எனக்கு பொம்மை படத்தில் நடிக்க காரணம் என்னவென்றால், படத்தின் கதை தான் முக்கிய காரணம்.
எனக்கு மான்ஸ்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கதை கேட்காமலே நடிப்பேன். ஏனென்றால், அவருடைய வேலையை பற்றி எனக்கு தெரியும். அவர் மீது எனக்கு மிகவும் நம்பிக்கை இருக்கிறது. அவரை நம்பி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் போதும் வேலையை வேகமாக முடித்துவிடுவார்.
அவரை போல தான் பொம்மை படத்தின் இயக்குனர் ராதா மோகன் சாரும். இவர்களுடைய படங்கள் என்றால் நான் கதை கேட்காமல் கூட நடிப்பேன். அந்த அளவிற்கு நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக பொம்மை படத்தை பாருங்கள் உங்கள் அனைவர்க்கும் பிடிக்கும் “என கூறியுள்ளார்.
மேலும், நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது பொம்மை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இந்தியன் 2, டிமாண்டி காலனி 2, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இந்த திரைப்படங்களின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.